Brief details for each person!

அம்மு சுவாமிநாதன் | 22-Apr-2016 19:55

சர்வதேச மகளிர் ஆண்டின் தாய் என்று வர்ணிக்கப்படுபவர் அம்மு சுவாமிநாதன்.கேரள மாநிலம், பாலக்காட்டில் பிறந்தார்; பள்ளிக்கூடம் செல்லாமல், வீட்டிலேயே கல்வி கற்றார். இங்கிலாந்தில், சுவாமிநாதனை பதிவு திருமணம் செய்தார்; அப்போது அவருக்கு, 13 வயது.
மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்; பல முறை கைது செய்யப்பட்டு, சிறைவாசம் அனுபவித்தார். அனைத்திந்திய மகளிர் அமைப்பின் நிலைக்குழு தலைவராக பணியாற்றினார். வாஷிங்டனில் நடந்த, அனைத்துலக மகளிர் மாநாட்டில், இந்திய பிரதிநிதியாக பங்கேற்றார்.மகளிருக்கு தேர்தலில் பங்கு பெற உரிமை, கட்டாய இலவச கல்வி, குழந்தை திருமண ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சி உறுப்பினர், லோக்சபா உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தார். யுனெஸ்கோவில், இந்திய பிரதிநிதியாக பணியாற்றினார். 1978ல், இயற்கை எய்தினார்.
அம்மு சுவாமிநாதன் பிறந்த தினம் இன்று!